அசோலா எனும் ஓர் அமுதசுரபி!
அசோலா எனும் ஓர் அமுதசுரபி!
பாலைப் பெருக்குது... பணத்தையும் கொடுக்குது!
“ஊர்ல சொல்வாங்களே... சுண்டைக்காய் கால்பணம், சுமை கூலி முக்காப்பணம்னு...
அதுமாதிரிதான் நேத்துவரை எங்க பொழப்பு இருந்துச்சி. பால் கறந்து வித்தா கிடைக்கற
காசுல பாதி
காசு தீவனம் வாங்கறதுக்கே காணாம போயிட்டி ருந்திச்சி. கையில கால் காசு
தங்கல. ஆனா, இன்னிக்கு நிலமையே வேற... இந்த அசோலாவை வளர்த்து மாடுகளுக்குக்
கொடுத்த பின்னாடி தீவன செலவுபாதியா கொறைஞ்சி போச்சி.. அதோட பாலும்்
கூடுதலா கறக்குது. இப்பதான் நாலு காசு
கையில நிக்கிது”
-திண்டுக்கல் அருகே கண்ணாபட்டியைச் சேர்ந்த
முருகேசன் என்கிற விவசாயியின்
அனுபவம் இது.
இவரைப் போலவே பல விவசாயிகளின் வாழ்க்கையில் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திக்
கொண்டிருக்கிறது அசோலா என்ற பாசிவகைத் தாவரம். ஐம்பது செங்கல், சின்னதாக ஒரு
தார்பாலின் ஷீட், இரண்டு சட்டி மாட்டுச் சாணம், பத்துக் குடம்
தண்ணீர், கால் கிலோ
அசோலா இது இருந்தால் போதும்... நீங்களும் அசோலா
வளர்க்க ஆரம்பித்துவிடலாம்.
இவற்றை வாங்குவதற்கு வெறும் இருநூறு
ரூபாய்தான் செலவு... மூன்றே நாட்களில்
இருமடங்கு, அடுத்தடுத்த
நாட்களில் பலமடங்கு என்று பெருகிக்கொண்டே இருக்கும்
அசோலாவினால் கிடைக்கும் பலனோ... பல ஆயிரம் ரூபாய்
மதிப்புடையது.மாட்டுக்கு
மட்டுமல்லாமல் அனைத்து கால்நடை
களுக்கும் தீவனமாக பயன்படுவதுடன், நெல்
வயலில்
உரச்செலவை குறைத்து, களையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்த
அசோலாவுக்கு இருப்பதால், விவசாயிகளைப் பொறுத்தவரை இது ஓர்
அமுதசுரபி!
Comments
Post a Comment