அசோலா எனும் ஓர் அமுதசுரபி!
அசோலா எனும் ஓர் அமுதசுரபி ! பாலைப் பெருக்குது ... பணத்தையும் கொடுக்குது ! “ ஊர்ல சொல்வாங்களே ... சுண்டைக்காய் கால்பணம் , சுமை கூலி முக்காப்பணம்னு ... அதுமாதிரிதான் நேத்துவரை எங்க பொழப்பு இருந்துச்சி . பால் கறந்து வித்தா கிடைக்கற காசுல பாதி காசு தீவனம் வாங்கறதுக்கே காணாம போயிட்டி ருந்திச்சி . கையில கால் காசு தங்கல . ஆனா , இன்னிக்கு நிலமையே வேற ... இந்த அசோலாவை வளர்த்து மாடுகளுக்குக் கொடுத்த பின்னாடி தீவன செலவு பாதியா கொறைஞ்சி போச்சி .. அதோட பாலும் ் கூடுதலா கறக்குது . இப்பதான் நாலு காசு கையில நிக்கிது ” - திண்டுக்கல் அருகே கண்ணாபட்டியைச் சேர்ந்த முருகேசன் என்கிற விவசாயியின் அனுபவம் இது . இவரைப் போலவே பல விவசாயிகளின் வாழ்க்கையில் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அசோலா என்ற பாசிவகைத் தாவரம் . ஐம்பது செங்கல் , சின்னதாக ஒரு தார்பாலின் ஷீட் , இரண்டு சட்டி மாட்டுச் சாணம் , பத்துக் குடம் தண்ணீர் , கால் கிலோ அசோலா இது இருந்தால் போதும் ... நீங்களும் அசோலா வளர்க்க ஆரம்பித்துவிடலாம் . இவற்றை வாங்குவதற்கு வெறும் இருநூற
Comments
Post a Comment