Posts
Showing posts from August, 2013
99 பூக்கள் இங்கே..!!
- Get link
- X
- Other Apps
கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே: வள் இதழ் ஒண் செங் காந்தள் , ஆம்பல் , அனிச்சம் , தண் கயக் குவளை , குறிஞ்சி , வெட்சி , செங் கொடுவேரி , தேமா , மணிச்சிகை , உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் , கூவிளம் , எரி புரை எறுழம் , சுள்ளி , கூவிரம் , வடவனம் , வாகை , வான் பூங்குடசம் , எருவை , செருவிளை , மணிப் பூங் கருவிளை , பயினி , வானி , பல் இணர்க் குரவம் , பசும்பிடி , வகுளம் , பல் இணர்க் காயா , விரி மலர் ஆவிரை , வேரல் , சூரல் , குரீஇப் பூளை , குறுநறுங் கண்ணி , குருகிலை , மருதம் , விரி பூங்கோங்கம் , போங்கம் , திலகம் , தேங் கமழ் பாதிரி , செருந்தி , அதிரல் , பெருந் தண் சண்பகம் , கரந்தை , குளவி , கடி கமழ் கலி மா , தில்லை , பாலை , கல் இவர் முல்லை , குல்லை , பிடவம் , சிறுமாரோடம் , வாழை , வள்ளி , நீள் நறு நெய்தல் , தாழை , தளவம் , முள் தாள் தாமரை , ஞாழல் , மௌவல் , நறுந் தண் கொகுடி , சேடல் , செம்மல் , சிறுசெங்குரலி , கோடல் , கைதை , கொங்கு முதிர் நறு வழை , காஞ்சி , மணிக் குலைக் கள் கமழ் நெய்தல் , பாங்கர் , மராஅம் , பல் பூந் தணக்கம் , ஈங்கை , இலவம் , தூங்கு இணர்க் கொன்றை
வருடம் முழுவதும் வெண்டை சாகுபடி
- Get link
- X
- Other Apps
வருடம் முழுவதும் வெண்டை சாகுபடி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் கிணற்றுப் பாசன நிலங்களில் நெல் சாகுபடி செய்ய இயலாத இடங்களில் குறுகிய காலப்பயிரான வெண்டையை சாகுபடி செய்யலாம் . இம்மாதிரியான சூழ்நிலையில் வெண்டை சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல லாபம் எடுத்துள்ளனர் . ஆனி - ஆடி பட்டத்தில் ஒருவிதமான காற்றும் உஷ்ணமும் நிலவும் . இச்சூழ்நிலையில் மஞ்சள் நரம்பு நோய் செடிகளைத் தாக்கும் . விவசாயிகளுக்கு பேயர் கம்பெனிக்காரர்கள் உதவி செய்வார்கள் . இவர்களிடம் " கொளச் ' என்னும் மருந்து உள்ளது . இந்த மருந்தினை விதையுடன் கலந்து விதைத்தால் வியாதி வருவதில்லை . பேயர் கம்பெனி விதையுடன் மருந்து கலந்து கொடுத்து உதவுகின்றது . இந்த கம்பெனியில் அதிக மகசூல் தரும் ஒட்டு வீரிய ரகங்களும் உள்ளன . ( மைக்கோவின் ஒட்டு வீரிய ரகங்களான நம்பர் 10, 11, 12) விதையுடன் மருந்து கலப்பது எப்படியெனில் , ஒரு கிலோ விதைக்கு 30 கிராம் கொளச் மருந்து கலக்க , ஆறிய அரிசி கஞ்சியை எடுத்துக்கொண்டு அதில